Idhaya Oli

Tamil Poem - Tamil Kavithai

Idhaya Oli

Author : Shanthi Abe
Added On : 3/8/2012
Viewed 2731 Times

ftpij - Poem

நீ மரண வேதனைப் படும் சில
மணித்துளிகள் நாங்கள்
உன் அருகில் இல்லா நிலைகண்டு
மனம் பதைக்கிறது !
தாங்கொண்ணா துயரத்தில் துடிக்கிறது !
அவ்வினாடி பார்த்திருந்தால் அன்று முதல்
தூக்கத்தை மறந்து இருப்போம்
என்றெண்ணியோ வரும் முன்
நீ நீண்ட உறக்கம் கொண்டாய் !

ஒருவேளை நாங்கள் அருகில் இருந்திருந்தால்
இறைவனிடம் மண்டியிட்டு வேண்டி இருப்போம்
நாங்கள் உள்ளவரை நீ எங்களோடு வாழ
வேண்டுமென்று - நலம் பெற்று திரும்பி
இல்லம் வருவாய் என்று உன் இல்லாளும்
நீ பெற்ற பிள்ளைகளும் விரும்பி நின்றோம் -
ஆனால் நீயோ மூன்றே தினமதில்
எண்ணிப்பார்க்க முடியா இடத்திற்கு
எங்களை விட்டுச் சென்றாய் !
அனைவரையும் மீளா துயரத்தில் இட்டுச்
சென்றாய் !

நான் பிறந்தபொழுது நீ என் தாத்தாவானாய்
உன் மகனை மணந்தபொழுது நீ என்
தந்தையானாய் என் பிள்ளைகள்
வளர்ந்தபின்போ - மாலையில்
வீடு வரும் தாயின் கரம் உள்ள பண்டத்திற்கு
ஏங்கி நிற்கும் என் சேயானாய் - ஏனோ எங்கள்
உள்ளம் உனக்கு விடைகொடுக்க மறுக்கிறது -
இருப்பினும் நீ நடந்து சென்ற பாதையை
திரும்பி பார்க்கின்றோம்
நீ விட்டுச்சென்ற காரியங்களை தொடர
நினைக்கின்றோம் அதை செவ்வனே செய்ய
இறைவனை வேண்டி நிற்கின்றோம் !

உன்னைப்பிரிந்த நினைவு இல்லா
அத்தருணத்தை - மக்கள் பிணம் என்றே
எங்களை அழைத்திடுவர் – ஆனால் நாங்களோ
அச்சமயத்தில் உன்னோடு சேர்ந்து நித்திய
வாழ்வின் மகிமையைப் பெற்றவர்களாய்
இறைவனோடு களித்திருப்போம் என்று பதிவு
செய்து அதுவரையில் அமைதிகாண
அனைகட்டுகின்றேன்.
எங்கள் இதய ஒலிகளுக்கு...>



MOST POPULAR TAMIL POEMS - TAMIL KAVITHAIGAL

Poem - KAVITHAI Author Views
Unmai Kavithai R. Kanirajan 2367
2012 nallavazhigal thirakkattum Kavithai R. Kanirajan 2638
Yaathumaagi Kavithai Dhuruvan 2597
Vazhkaiyin Karunizhalgal Kavithai R. Kanirajan 2152
Kuzhanthai Kavithai Panivizhum_malarvanam 3592
Nanbane Enathu Uyir Nanbane Kavithai Malargal 5300
Nagaipu Kavithai Manibharathi 2513
veLLi muLaikkum Kavithai ts raj 2358
Perasaikaari Kavithai Vijaynimi 2170
Prachinaigal Kavithai R. Kanirajan 2323
Pongalthina Kavithai Kavithai R. Kanirajan 2389
Aasai Kavithai uma maheswari.n.a 4483
Kuzhanthaigal Thina Kavithai Kavithai R. Kanirajan 6581
Un Thevai En Anbu Kavithai Usha Giridhar 1361
Thozhiye Nee Vara Kavithai Divya Darshini 2652